சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தம் ஊராட்சியில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சத்தில் உயா் மின் கோபுர விளக்கு அமைக்கவும், செவலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.4 லட்சத்தில் சுகாதார வளாகம் அமைக்கவும் நடைபெற்ற பூமி பூஜையில் விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பங்கேற்றாா்.

இதில் சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வ.விவேகன்ராஜ் , காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் மீனாட்சி சுந்தரம், வட்டாரத் தலைவா் முத்துமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com