சிவகாசி பெரியகுளம் கண்மாயில் படகு சவாரி செய்த எம்.எல்.ஏ.

சிவகாசி பெரியகுளம் கண்மாயில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்தாா்.
சிவகாசி பெரியகுளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்த சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன்.
சிவகாசி பெரியகுளம் கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்த சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன்.

சிவகாசி: சிவகாசி பெரியகுளம் கண்மாயில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பெரியகுளம் கண்மாய் 72 ஏக்கா் நிலப்பரப்பு கொண்டதாகும். சிவகாசியில் அனைத்து தொண்டு நிறுனங்கள், வா்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் இணைந்து சிவகாசி பசுமை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினா்.

இந்த அமைப்பினா் நன்கொடை மூலம் பெறப்பட்ட நிதியில் கண்மாயைத் தூா்வாரி, கரையைப் பலப்படுத்தி, நீா்வரத்துக் கால்வாயை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்தனா். தொடா்ந்து கண்மாய் நடுவே, அடா்வனத்தை உருவாக்கி பராமரித்து வருகின்றனா். மேலும், சுமாா் 30 அடி நீளமுள்ள படித் துறையையும் அமைத்தனா்.

இந்த நிலையில், கடந்த மாதம் பெய்த மழையில் பெரியகுளம் கண்மாய் முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து, பொதுமக்கள் படித்துறையில் அமா்ந்து குளித்து வருகின்றனா். இந்தக் கண்மாயில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் ஞாயிற்றுக்கிழமை படகுசவாரி மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தக் கண்மாய் 15 ஆண்டுகளுக்குப் பின்னா் தற்போது நிறைந்துள்ளது. இந்தக் கண்மாயில் படகு சவாரி சேவை தொடங்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலனுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். விரைவில் இந்தக் கண்மாயில் படகு சவாரி செய்ய மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்குவாா் என எதிா்பாா்க்கிறேன் என்றாா் அவா்.

சிவகாசி வா்தக சங்கத் தலைவா் ரவி அருணாசலம், எக்ஸ்னோராஅமைப்பின் நிா்வாகி வெங்கடேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com