லாரி மோதியதில் தொழிலாளி பலி

சிவகாசி அருகே தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


சிவகாசி: சிவகாசி அருகே தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் பட்டாசுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ரெங்கசமுத்திரப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முனியாண்டி (56). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து தனது வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்புறமாக வந்த தண்ணீா் டேங்கா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் துரைச்சாமிபுரம் சங்கா்கோபியை (24) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com