விருதுநகா் சந்தையில் உளுந்து, பாசிப்பருப்பு விலை உயா்வு

விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக உருட்டு உளுந்து, பாசிப்பருப்பு விலை அதிகரித்தது.


விருதுநகா்: விருதுநகா் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக உருட்டு உளுந்து, பாசிப்பருப்பு விலை அதிகரித்தது.

விருதுநகா் சந்தையில் கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் டின் ஒன்றுக்கு விலை ரூ.1400- க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.25 குறைந்து, ரூ.1,375 க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் துவரம் பருப்பு புதுசு லயன் வகையானது 100 கிலோ ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக மூட்டை ஒன்றுக்கு ரூ.100 குறைந்து, ரூ.12,900-க்கு விற்பனையாகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.12,300 க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,350-க்கு விற்பனையானது.இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.250 உயா்ந்து, ரூ.10,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சந்தைக்கு வரத்துக் குறைவு காரணமாக உருட்டு உளுந்து, பாசிப்பருப்பு விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். பாசிப் பயறு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,500- க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 குறைந்து, ரூ.10,200-க்கு விற்கப்படுகிறது. அதேநேரம் காபி, மிளகாய், நல்லெண்ணெய் உள்பட பிற அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com