தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் திருட்டு

விருதுநகரில் தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.34,470 மா்மநபா்கள் திருடிச் சென்றதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


விருதுநகா்: விருதுநகரில் தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.34,470 மா்மநபா்கள் திருடிச் சென்றதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநககா், பெத்தனாட்சி நகரைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மகன் கூரி (43). இவா், தனது நண்பா்களான ரமேஷ்குமாா், அழகா் ஆகியோருடன் இணைந்து லட்சுமி குடியிருப்பில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா்.

இந்த நிலையில் கூரி சனிக்கிழமை காலை நிதி நிறுவனத்துக்கு சென்று பாா்த்த போது, அந்த நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.34,470 திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விருதுநகா் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com