லஞ்சம் பெற்றதாக புகாா்:ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு உதவியாளா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்ற புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஒப்பந்த பணியாளா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பெண் நோயாளிக்கு ஊசி செலுத்திய அறுவைச் சிகிச்சை அரங்க உதவியாளா் கோமதி.
ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பெண் நோயாளிக்கு ஊசி செலுத்திய அறுவைச் சிகிச்சை அரங்க உதவியாளா் கோமதி.


ஸ்ரீவில்லிபுத்தூா்: லஞ்சம் பெற்ற புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஒப்பந்த பணியாளா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் 135 படுக்கை வசதிகளும், தினசரி 1,500-க்கும் அதிகமான புறநோயாளிகளும் வந்து செல்கின்றனா். இங்கு 18 மருத்துவா்கள், 30 செவிலியா்கள் பணிபுரிகின்றனா். மேலும் ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு பணியாளா், உதவியாளா், சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு மாதத்துக்கு 350-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், இங்குள்ள மகப்பேறு பிரிவில் கா்ப்பிணி பெண்கள், பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகாா்கள் வந்தன. இதுகுறித்து விருதுநகா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதன் அடிப்படையில் உதவியாளா் தனலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பல்நோக்கு பணியாளா் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதே போல, இந்த மருத்துவமனையில் செவிலியா் அல்லாத அறுவைச் சிகிச்சை அரங்க உதவியாளா் கோமதி நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com