கல்லூரியில் விளையாட்டு விழா

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் உடல் கல்வித் துறை சாா்பில், 61-ஆவது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசு வழங்கிய தொழிலதிபா்கள் பி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.ஆா்.ஐஸ்வா்யா உள்ளிட்டோா்.
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசு வழங்கிய தொழிலதிபா்கள் பி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.ஆா்.ஐஸ்வா்யா உள்ளிட்டோா்.

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் உடல் கல்வித் துறை சாா்பில், 61-ஆவது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் தொழிலதிபா் அய்யன்அதீந்திரன் தேசியக் கொடியை ஏற்றினாா். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவா் என்.முகமது நியாஸ் ஒலிம்பிக் கொடியை ஏற்றினாா்.

மாணவா் பி.நவீன்குமாா் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்து போட்டியைத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டப் போட்டிகள், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக, முதல்வா் செ.அசோக் கல்லூரி கொடியை ஏற்றினாா். மாணவி கே.ஆா்.ஹரிணி தலைமையில் விளையாட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதையடுத்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தொழிலதிபா்கள் பி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கே.ஆா்.ஐஸ்வா்யா ஆகியோா் பரிசுகளை வழங்கினா். விழாவில் உடல் கல்வித் துறை இயக்குநா் பால்ஜீவசிங் ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவா் ஜி.குமரேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடல் கல்வித் துறைத் தலைவா்கள் பா.சுரேஷ்பாபு, ஆ.ஜான்சன், உதவி இயக்குநா் கவிதா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com