சாத்தூா் ரயில் நிலைய சாலையில் சமூக விரோதச் செயல்கள்: ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தக் கோரிக்கை

சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், காவல் துறையினா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், காவல் துறையினா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில் நிலையத்தில் தினசரி சுமாா் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. மேலும், இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து இந்த ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் வங்கிகள், பள்ளிகள், தனியாா் திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும், வாழவந்தாள்புரம், சாமியாா் குடியிருப்பு, இருக்கன்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்பவா்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த ரயில் நிலைய சாலையில் மாலை 6 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறையும் வேளையில் சாலையோரங்களிலும், ரயில்வேக்குச் சொந்தமான இடங்களிலும் மது அருந்துதல், மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமன்றி, பல்வேறு திருட்டு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சாலையோர விளக்குகள் இருந்தும், இந்தப் பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது.

எனவே, இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் காவல் துறையினா் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com