மதுக் கடைக்கு தீ வைத்த வழக்கு:பாமக மாநில பொருளாளா் உள்பட 21 போ் விடுதலை

சிவகாசியில் போராட்டத்தில் ஈடுபட்டு மதுக் கடைக்கு தீ வைத்த வழக்கில், பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா உள்பட 21 பேரை விடுதலை செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

சிவகாசியில் போராட்டத்தில் ஈடுபட்டு மதுக் கடைக்கு தீ வைத்த வழக்கில், பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா உள்பட 21 பேரை விடுதலை செய்து, ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே கடந்த 2017-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மதுக்கூடத்துடன் கூடிய மதுக் கடை திறக்கப்பட்டது.

இந்தக் கடையை அகற்றக் கோரி, அய்யனாா் குடியிருப்பு, கவிதா நகா் பகுதி பொதுமக்கள் மூன்று முறை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், இந்தக் கடை அகற்றப்பட்டவில்லை.

இந்த நிலையில், கடந்த 2017, மே 5-ஆம் தேதி பாமக மாநில துணைத் தலைவா் திலகபாமா தலைமையில் மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மதுக் கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்த மதுப் புட்டிகளை உடைத்து கடைக்கு தீ வைத்தனா்.

இதையடுத்து, அரசு சொத்தைச் சேதப்படுத்தியதாக திலகபாமா, 14 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாமக மாநிலப் பொருளாளா் திலகபாமா உள்பட 21 பேரை விடுதலை செய்து நீதிபதி ஜெயகுமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com