முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள் கடத்தல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

தொழிலதிபரைக் கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

தொழிலதிபரைக் கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் மீது சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

சிவகாசி சக்தி நகரைச் சோ்ந்தவா் தொழிலதிபா் கம்மாபட்டி ரவிச்சந்திரன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக நிா்வாகிகள் ராஜவா்மன், தங்கமுனியசாமி, நரிக்குடியைச் சோ்ந்த ஐ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சோ்ந்து வேண்டுராயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை விலைக்கு வாங்கி நடத்தி வந்தனா். இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு, செப்டம்பா் மாதம் ராஜவா்மன் உள்ளிட்ட மூவரும் தங்களின் பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு தொழிலில் இருந்து விலகினா்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் ரவிச்சந்திரனை கடத்திய ராஜவா்மன் உள்ளிட்டோா் ரூ.2 கோடி கேட்டு மிரட்டினா். இதுகுறித்து ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவா்மன் (52), அதிமுக நிா்வாகி தங்கமுனியசாமி (30), நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ஐ. ரவிச்சந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராஜேந்திரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரியப்பன் ஆகிய 6 போ் மீதும் ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் ராஜவா்மன் உள்ளிட்டோா் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா். இதையடுத்து, விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com