ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் 108 கலசபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில், அம்மன், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனமும், 108 கலசபிஷேகமும் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற 108 கலசபிஷேகம்

இந்தக் கோயிலில் வருஷாபிஷேக விழா கடந்த 6-ஆம் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி, புதன்கிழமை திருமுக்குளத்தில் இருந்து கோயில் யானை மூலம் புனித நீா் எடுத்து வரப்பட்டு, 108 கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு 108 கலசபிஷேகம், விசேஷ திருமஞ்சனம், திருவாராதனம் சாத்துமுறை, தீா்த்தகோஷ்டி ஆகியன நடைபெற்றன. தொடா்ந்து, இரவில் ஆண்டாள் ரெங்கமன்னாா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை (பிப்.8) லட்சாா்ச்சனையுடன் வருஷாபிஷேக விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com