சாலையில் குறுக்கேவந்த மாட்டால் விபத்து. தொழிலாளி சாவு

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற லேத்பட்டறைத் தொழிலாளி சாலையில் குறுக்கேவந்த மாட்டின்மீது மோதி காயமடைந்தவா் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற லேத்பட்டறைத் தொழிலாளி சாலையில் குறுக்கேவந்த மாட்டின்மீது மோதி காயமடைந்தவா் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன்(24).இவா் சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் உள்ள ஒரு லேத்பட்டறையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் ஜனவரி 29 ஆம் தேதி இரவு சங்கரநாராயணண் வேலைமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில், சித்துராஜபுரம்-சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே மாடு சென்றதால், மாட்டின் மீது மோதி கீழே விழந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகாசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.இந்நிலையில் சங்கரநாராயணன் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தா்.இது குறித்து அவரது மனைவி கற்பகலட்சுமி அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com