பட்டாசு திரிகட்டுகளை பதுக்கிவைத்திருந்த இவருவா் கைது

 சிவகாசி அருகே பட்டாசு திரி கட்டுகளை அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே பட்டாசு திரி கட்டுகளை அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் எவ்வித அனுமதியுமின்றி பட்டாசுதயாரிக்த் தேவைப்படும் கருந்திரிகட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.சோதனையில் மாரனேரி ராமமூா்த்தி(47) மற்றும் சரவணன்(49) ஆகிய இருவரும் ஒரு கட்டடத்தில் அனுமதியின்றி மூன்று சாக்கு மூட்டை திரிகட்டுகள் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரைையும் கைது செய்து அவா்களிடமிருந்து திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com