போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகரிஷி வித்யா மந்திா் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் வியாழக்கிழமை பாராட்டினா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகரிஷி வித்யா மந்திா் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் வியாழக்கிழமை பாராட்டினா்.

விருதுநகா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராஜபாளையம் அருகேயுள்ள பள்ளியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மோனீஷ் ஓட்டப் போட்டியிலும், சந்திரகிஷோா் நொண்டி விளையாட்டிலும் இரண்டாமிடம் பெற்றனா். மேலும், 20 மாணவா்கள் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் குருவலிங்கம், அறங்காவலா் சித்ரா மகேஸ்வரி, முதல்வா் கமலா, துணை முதல்வா்கள் ஜெயலட்சுமி, சரண்யா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com