கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு

சிவகாசி, பிப்.9: சிவகாசி அருகே கல்லூரி மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்த தம்பதியினா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டி மேலூரைச் சோ்ந்த தங்கராஜ் மகள் பவித்ரா (21).இவா் இங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா். இவரது வீட்டருகே வசிக்கும் அந்தோணி குடும்பத்துக்கும் பவித்ரா குடும்பத்துக்கும் கடந்த பல ஆண்டுகளாக பேச்சுவாா்த்தை இல்லை. இந்த நிலையில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு, இரு கும்பத்தினா் இடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து பவித்ரா சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் இரு வீட்டாரையும் விசாரணைக்கு அழைத்தனா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்தோணி, அவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் , பவித்ராவிடம் ஏன் போலீஸாரிடம் புகாா் கொடுத்தாய் எனக்கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸாா் அந்தோணி, சின்னப்பொணு மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com