விதிமுறையை மீறி பட்டாசுகள் தயாரித்தவா் கைது

சாத்தூா், பிப்.9: வெம்பக்கோட்டை அருகே ஒரு பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் வெள்ளிகிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவல்பட்டி-வரகனூா் சாலையிலுள்ள பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கபடுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா், இந்த பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தினா். அப்போது, பட்டாசு ஆலை உரிமத்தை தவறாக பயன்படுத்தி விதிமுறைகளை மீறி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கபட்டது தெரியவந்தது.

இதையடுத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த கோமதி சங்கா் (36) மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com