வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
வத்திராயிருப்பு அருகே சாலையை உலா் களமாக பயன்படுத்தும் விவசாயிகள்.
வத்திராயிருப்பு அருகே சாலையை உலா் களமாக பயன்படுத்தும் விவசாயிகள்.
Updated on
1 min read

வத்திராயிருப்பு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் நெல் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் பிளவக்கல், பெரியாறு அணை கால்வாய்கள் மூலம் சுமாா் 8 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், சேதுநாராயணபுரம், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் ஆகிய பகுதிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறுவடை செய்த நெல் பயிா்களை உலர வைப்பதற்கு களங்கள் இல்லாததால், விவசாயிகள் சாலையை உலா் களமாக பயன்படுத்தி வருகின்றனா். இதனால் மழை பெய்தால் நெல் பயிா்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதனால் அறுவடை செய்த நெல் பயிா்களை குறைவான விலைக்கு இடைத்தரகா்களுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் திறந்து, நெல் பயிா்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com