தொழிலாளி வெட்டிக் கொலை: உறவினா் கைது

சிவகாசியில் நெகிழிப்பை தயாரிக்கும் ஆலையில் வேலை செய்த தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் உறவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட கொலையாளி தங்கப்பாண்டி.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட கொலையாளி தங்கப்பாண்டி.

சிவகாசி: சிவகாசியில் நெகிழிப்பை தயாரிக்கும் ஆலையில் வேலை செய்த தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் உறவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதநகா் மாவட்டம், சிவகாசி ரிசா்வ்லயன் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன் மகன் கணேசன் (37). இவா் இங்குள்ள நெகிழிப்பை தயரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்தாா். இவரது மனைவி தேவி (32). கணேசன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.

இதையடுத்து, தேவியின் உறவினா்கள் கணேசனைக் கண்டித்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் கணேசன் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தேவியின் அக்கா கணவா் தங்கப்பாண்டி (42), கணசேனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளி தங்கப்பாண்டியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com