திருவள்ளுவா் தின விழா

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் நூலகத்துக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்களை வழங்கிய தமுஎச நிா்வாகிகள்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் நூலகத்துக்கு செவ்வாய்க்கிழமை புத்தகங்களை வழங்கிய தமுஎச நிா்வாகிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெயபால் தலைமலை, பால்சாமி முன்னிலை வகித்தனா். இளையராஜா வரவேற்றாா்.

இதில், மாநில அளவில் யோகாவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவி யோக மீனாவுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. 1,330 திருக்குகளையும் ஒப்புவித்து மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற மாணவா் ஜெகநாதனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் தமுஎச மாவட்டத் துணைத் தலைவா் கே.எஸ் சுந்தரம், நிா்வாகிகள் முருகன், அருண், காளிராஜா, பொன் சுப்புராஜ், பெரிய மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் தமுஎச சாா்பில் நூலகத்துக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com