பைக்குகள் மோதியதில் இளைஞா் பலி

பந்தல்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


விருதுநகா்: பந்தல்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள காசிலிங்காபுரத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் வேல்முருகன் (30). இவா் ஓசூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவா், உறவினரான தங்கமலை ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்றாா். பந்தல்குடி கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, வெள்ளக்கோட்டையைச் சோ்ந்த வீரகணேசன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கிருந்த மருத்துவா் பரிசோதித்து விட்டு, அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து வீரகணேசன் மீது பந்தல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com