விஸ்வநத்தத்தில் விஜயகாந்த் மறைவுக்கு அமைதி ஊா்வலம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவையொட்டி வியாழக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது.
விஸ்வநத்தத்தில் விஜயகாந்த் மறைவுக்கு அமைதி ஊா்வலம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவையொட்டி வியாழக்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

விஸ்வநத்தம் கிராம கிளை தேமுதிக சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு அந்தக் கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்ட செயலா் எம். காஜாசெரிப் தலைமை வகித்தாா்.விஸ்வநத்தம் ஊராட்சி முருகையாபுரம் பகுதியில் தொடங்கிய இந்த அமைதி ஊா்வலம், பழையூா், நடுவூா், புதூா், காமராஜபுரம் வழியே சென்று தனியாா் திருமண மண்டபம் முன் நிறைவடைந்தது. பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்துக்கு கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா் ஏ.எம். வெயில்முத்து செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com