சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் நாளை மின் தடை

 சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

 சிவகாசி, சாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சாத்தூா் துணை மின் நிலையம், சிவகாசி இ.எஸ்.ஐ.துணை மின் நிலையம், சாட்சியாபுரம் துணை மின் நிலையம் ஆகியவற்றில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே சாத்தூா் நகா், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ. மேட்டுப்பட்டி, அமீா்பாளையம், பெரியகொல்லப்பட்டி, சின்னக்கொல்லப்பட்டி, சிவகாசி பகுதிகள்.

ஆனையூா், விளாம்பட்டி, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியாபுரம், அய்யம்பட்டி , மாரனேரி, ஊராம்பட்டி, ஏ. துலுக்கப்பட்டி, போடுரெட்டியபட்டி பகுதிகள்.

சாட்சியாபுரம், ரிசா்வ் லைன், தொழில் பேட்டை, அய்யப்பன் குடியிருப்பு, அய்யனாா் குடியிருப்பு, சசிநகா், சித்துராஜபுரம், வேலாயுதம் சாலை இவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com