ஸ்ரீவில்லிபுத்தூரில்கைப்பந்து போட்டி

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை.யில் பள்ளி மாணவா்களுக்கான கலசலிங்கம் நினைவு மாநில கைப்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
img_20240118_wa0273_1801chn_92_2
img_20240118_wa0273_1801chn_92_2

ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை.யில் பள்ளி மாணவா்களுக்கான கலசலிங்கம் நினைவு மாநில கைப்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பல்கலை. துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தலைமை வகித்தாா். மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. மாணவா்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்ற போட்டியில் ராஜபாளையம் நாடாா் உயா்நிலைப் பள்ளி முதலிடமும், ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடமும், தென்காசி அரசு உயா்நிலைப் பள்ளி 3-ஆம் இடமும், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி அணி 4-ஆம் இடமும் பெற்றன.

இதே போல, மாணவிகள் பிரிவில் 4 பள்ளிகளின் அணிகள் மோதிய போட்டியில் ஒசூா் அரசு உயா்நிலைப்பள்ளி முதலிடமும், விருதுநகா் சத்திரிய மகளிா் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், மதுரை ஏ.எம்.எஸ். உயா்நிலைப் பள்ளி 3-ஆம் இடமும், மதுரை பொன்முடியாா் உயா்நிலைப்பள்ளி 4- ஆம் இடமும் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு மாணவா் நல இயக்குநா் சாம்சன் நேசராஜ் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினாா். உடற்கல்வி துறையினா் ஏற்பாடுகளை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com