சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

சாத்தூரில் 35-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் 35-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துக் காவலா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற தனியாா் பள்ளி மாணவிகள் சாத்தூரின் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

இதில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மணிமாறன், சிறப்பு உதவி ஆய்வாளா் காளிராஜ், என்எச்ஏஐ மேலாளா் பிரவீன்குமாா்ரெட்டி, ராஜதுரை எத்தில் ஹாா்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பஞ்சவா்ணம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com