மணல் திருட்டு: பைக்குகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

ரெங்கப்பநாயக்கன்பட்டியில் சுகாதாரத் துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் இருவா் மணல் அள்ளி, அதை இரு சக்கர வாகனங்களில் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, எஸ்.ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த மோகன்ராஜ், ராமசாமி ஆகிய இருவா் மீதும் கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com