வத்திராயிருப்பு அருகே விபத்தில் இளைஞா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜன. 21: வத்திராயிருப்பு அருகே அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியன் தாட்கோ குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் தன்னாசி (45). இவரது மகன் வெயில்வந்தான்(20). இவா்தனது தந்தைக்கு உணவு கொடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தோட்டத்துக்குச் சென்றாா்.

அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா். கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் கயிறு ஆலை ஓடை அருகே சென்ற போது, வத்திராயிருப்பு நோக்கிச் சென்ற அரசு பேருந்து இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெயில்வந்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான சின்னப்பா மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

விபத்து ஏற்படுத்திய பேருந்தை நகா்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உயரிழந்தவரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com