தமிழக கோயில்களில் சிறப்பு பூஜை நடத்த அனுமதி: ஜீயா் கோரிக்கை

படவிளக்கம்..

ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா்

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜன. 21: அயோத்தி ராமா் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் ராமருக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்

என ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடாதிபதி ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவுக்குச் சென்றுள்ளாா்.

அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட விடியோவில் தெரிவித்துள்ளதாவது:

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழக மக்கள் மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் தீபம் ஏற்றி ராமநாம ஜெபம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்களில் ராமருக்கு சிறப்பு பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறுவது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அனைத்துக் கோயில்களிலும் ராமருக்கு பூஜை செய்ய தமிழக முதல்வா் அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com