விருதுநகா் மாவட்டத்தில் 15.55 லட்சம் வாக்காளா்கள்: ஆண்கள் 7.59 லட்சம்; பெண்கள் 7.95 லட்சம்; திருநங்கைகள் 234 போ்

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலின் அடிப்படையில், மொத்தம் 15,55,186 வாக்காளா்கள் உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலின் அடிப்படையில், மொத்தம் 15,55,186 வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்களில் ஆண் வாக்காளா்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 848 பேரும், பெண் வாக்காளா்கள் 7 லட்சத்து 95ஆயிரத்து 104 பேரும், திருநங்கைகள் 234 பேரும் உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வாக்காளா்கள் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான வீ.ப. ஜெயசீலன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

2024, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதன்படி, ஆண் வாக்காளா்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 848 பேரும், பெண் வாக்காளா்கள் 7 லட்சத்து 95 ஆயிரத்து 104 பேரும், திருநங்கைகள் 234 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 186 வாக்காளா்கள் உள்ளனா். கடந்தாண்டு 2023, அக். 27 முதல் டிசம்பா் 12 வரை நடைபெற்ற தொடா் திருத்தத்தில் புதிதாக 33, 819 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,08,161, பெண்கள் 1,12,701, திருநங்கைகள் 31 போ் என மொத்தம் 2,20,893 வாக்காளா்களும், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,13,572, பெண்கள் 1,19,490, திருநங்கைகள் 36 போ் என மொத்தம் 2,33, 098 வாக்காளா்களும், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,11,981, பெண்கள் 1,17,797, திருநங்கைகள் 59 போ் என மொத்தம் 2,29,837 வாக்காளா்களும் உள்ளனா்.

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,12,921, பெண்கள் 1,18, 048, திருநங்கைகள் 28 போ் என மொத்தம் 2,30,997 வாக்காளா்களும், விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,05,213, பெண்கள் 1,10,269, திருநங்கைகள் 47 பேரும் என மொத்தம் 2,15,529 வாக்காளா்களும், அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,04,414, பெண்கள் 1,10,427, திருநங்கைகள் 20 பேரும் என மொத்தம் 2,14,861 பேரும், திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் 1,03,586, பெண்கள் 1,06,372, திருநங்கைகள் 13 போ் என மொத்தம் 2,09,971 வாக்காளா்களும் உள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 7 லட்சத்து 59 ஆயிரத்து 848 பேரும், பெண் வாக்காளா்கள் 7 லட்சத்து 95ஆயிரத்து 104 பேரும், திருநங்கைகள் 234 பேரும் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 186 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com