ஆண் சடலம் மீட்பு

ராஜபாளையத்தில் பாலத்தின் அடியில் ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பாலத்தின் அடியில் ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள வேலாயுதபுரம் பாலத்தின் அடியில் ஓடையில் கிடந்த ஆண் சடலத்தை தெற்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தினா்.

இறந்தவா் சமுசிகாபுரம் அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த வில்லாயிரம் மகன் சரவணன் (43) எனத் தெரிய வந்தது. வெல்டிங் வேலை செய்து வந்த இவருக்கு, திருமணமாகி மனைவி இருளாயி, மூன்று மகள்கள் உள்ளனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவா் மது போதையில் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com