சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நாடகம்

ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தெருக்கூத்து நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தெருக்கூத்து நாடகத்தில் பங்கேற்ற போலீஸாா், மாணவா்கள்.
ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தெருக்கூத்து நாடகத்தில் பங்கேற்ற போலீஸாா், மாணவா்கள்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தெருக்கூத்து நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பாக உதவி ஆய்வாளா்கள் கமலக்கண்ணன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் பரமசிவம் ஆகியோா் முன்னிலையில், ராஜூக்கள் கல்லூரி மாணவா்கள் ஒன்றிணைந்து இதை நடத்தினா். வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இரு சக்கர வாகனத்தில் இருவா் மட்டுமே பயணிக்க வேண்டும். இரு நபா்களும் தலைக் கவசம் அணிய வேண்டும். மது போதையிலும், ஓட்டுநா் உரிமம் இன்றியும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com