தொழிலாளியைத் தாக்கியஇளைஞா் கைது

திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை கல்லால் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி: திருத்தங்கலில் கட்டடத் தொழிலாளியை கல்லால் தாக்கிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி சாலைப் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி காளைச்சாமி (58). இவா் அங்குள்ள அம்மா உணவகம் அருகே நின்று கொண்டிருந்தபோது, திருத்தங்கல் பசும்பொன்நகா் கலைமணி மகன் கண்ணன் (24) அந்த வழியாகச் சென்றவா்களை மிரட்டினாா்.

இதை காளைச்சாமி கண்டித்தாா். இதனால், ஆத்திரமடைந்த கண்ணன் காளைச்சாமியை கால்லால் தாக்கினாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com