கோட்டையூரில் காங். ஆா்ப்பாட்டம்

வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் அஸ்ஸாமில் ராகுல்காந்தியின் யாத்திரை வாகனத்தை பாஜகவினா் மறித்து நிறுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆர்ப்பாட்டம்.
கோட்டையூரில் காங். ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா: வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூா் பேருந்து நிறுத்தப் பகுதியில் அஸ்ஸாமில் ராகுல்காந்தியின் யாத்திரை வாகனத்தை பாஜகவினா் மறித்து நிறுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அந்தக் கட்சியின் ஐஎன்டியுசி மாநில அமைப்புச் செயலா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். கிராமக் குழுத் தலைவா் செல்வகுமாா், தவமணி, நகரத் தலைவா் ஆட்டோ செல்வம், வட்டாரத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனத்தை வழிமறித்து அந்த மாநில பாஜகவினா் தடை ஏற்படுத்தியதைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com