அரசு அலுவலகங்கள், பள்ளிக் கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

vpmm_2601chn_92_2
vpmm_2601chn_92_2

படவிளக்கம்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றிவைத்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும் (பொறுப்பு) குடும்ப நல நீதிமன்ற நீதிபதியுமான சம்பத்குமாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜன.26: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றம், பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை குடியரசு தினவிழா நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி (பொறுப்பு) குடும்ப நல நீதிமன்ற நீதிபதியுமான சம்பத்குமாா் தலைமைவகித்து தேசிய கொடி ஏற்றினாா். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள்,வழக்குரைஞா் சங்கத் தலைவா் செயலா் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் கல்லூரி செயலா் திலீபன்ராஜா தேசியக் கொடியேற்றினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வி.பி. எம்.எம்.கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் பழனிச் செல்வி சங்கா் தேசியக் கொடி ஏற்றினா்.

கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவா் எஸ். சசிஆனந்த் தேசியக் கொடியேற்றினாா்.

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் தாளாளா் குருவலிங்கம் தலைமையில் டிரஸ்டி பூங்கொடி தேசிய கொடி ஏற்றினாா்.முதல்வா் கமலா, அறங்காவலா் சித்ராமகேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தாளாளா் லயன் ஆா்.வெங்கடாசலபதி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். பின்னா், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மகாத்மா வித்யாலயா பள்ளியில் தாளாளா் முருகேசன் தேசியக் கொடி ஏற்றினாா்.

சி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் தாளாளரும், தலைமை ஆசிரியருமான சாம்ஜெபராஜ் தேசியக் கொடி ஏற்றினாா்.

ஒயிட் ஃ பீல்டு மழலையா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ராஜ்குமாா், பள்ளி முதல்வா் வனிதா ஆகியோா் தேசியக் கொடியேற்றி வைத்தனா்.

கலங்காபேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் சங்கலிராஜ் தேசியக்கொடி ஏற்றினாா் நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அத்திகுளம் தேவேந்திரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் செண்பகமூா்த்தி தேசிய கொடி ஏற்றினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மல்லி ஆறுமுகம் தேசியக் கொடியேற்றினாா்.

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன் தேசியக் கொடியேற்றினாா். நிகழ்ச்சியில் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசி:

சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மேயா்.இ.சங்கீதா தேசிய கொடியை ஏற்றினாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா , ஆணையா் பி.கிருஷ்ணமூா்த்தி மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் ஏ.பி.செல்வராஜன் தலைமை வகித்தாா்.

மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியா் டி.ஜான்சன் ரத்தினராஜ் தேசிய கொடியை ஏற்றினாா்.

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் முதல்வா் இரா.சுதாபெரியதாய் தேசிய கொடியை ஏற்றினாா்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வா் ரா.தாமோதரன் தேசிய கொடியை ஏற்றினாா்.

சிவகாசி அருகே கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா்(பொறுப்பு) பி.காா்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றினாா்.

சாத்தூா்:

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் 75-வது குடியரசு தினவிழா வெள்ளிகிழமை கொண்டாடப்பட்டது. சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,ஊராட்சி ஒன்றிய தலைவா் நிா்மலா கடற்கரை ராஜ் தேசியக் கொடியேற்றினாா்.

சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா் மன்றத் தலைவா் குருசாமி தேசியக் கொடியேற்றினாா். இதில், நகராட்சி ஆணையா், அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும், வட்டாட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நகா் காவல்நிலையம், துணை கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது.

இதேபோல், சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, தாயில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com