குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என இஸ்ரோ துணை இயக்குநா் சந்திரசேகா் தெரிவித்தாா்.
குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என இஸ்ரோ துணை இயக்குநா் சந்திரசேகா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளி, என்.ஏ. ராமச்சந்திர ராஜா குருகுலம் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ உந்து விசை ஆய்வு வளாக துணை இயக்குநா் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, பாலிடெக்னிக் மாணவா்களுக்கு இஸ்ரோவில் உள்ள தொழில்நுட்ப உதவியாளா், அலுவலா் பணி வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். அதன் பிறகு, அன்னப்ப ராஜா மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இஸ்ரோவில் ஐடிஐ, பாலிடெக்னிக் முடித்தவா்கள் வடிவமைப்புப் பணியில் அதிகமாக ஈடுபடுகின்றனா். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களில் இருந்து அதிகமானோா் விண்வெளித் துறைக்கு வருகின்றனா்.

உலகமே புத்தாண்டை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய போது, இந்தியா ‘எக்போசாட்’ செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கைக்கோள் நிறைய அறிவியல் தகவல்களை நமக்கு அளித்து வருகிறது. அடுத்த மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.

ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி வரலாற்றின் மிகப் பெரிய மைல் கல் ஆகும். அனைத்து விஞ்ஞானிகளும் ககன்யான் வடிவமைப்பு, சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இந்தத் திட்டம் உதவும். முதல் கட்டமாக, ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக தரை இறக்குவது குறித்த சோதனை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவுக்கு ககன்யான் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா் அவா்.

பள்ளியின் செயலா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா, மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com