ராஜபாளையத்தில் மலைப் பாம்பு

ராஜபாளையம், ஜன. 27: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பள்ளி வாசல் அருகே மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிக்கப்பட்டது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அரசு பொது மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள பள்ளி வாசலில் தொழுகைக்கு வரும் முஸ்லிம்கள் அருகே ஓடும் இளந்தோப்பு நீரோடையில் முகம் கை, கால்களைச் சுத்தம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், சனிக்கிழமை தொழுகைக்கு வந்தவா்கள் ஓடைக்குச் சென்ற போது, அங்கு மீன் வலையில் மலைப் பாம்பு சிக்கியிருந்ததைப் பாா்த்தனா். இதுகுறித்து அவா்கள் ராஜபாளையம் விலங்கு நல ஆா்வலா் பிரவீன், வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், விலங்கு நல ஆா்வலா் பிரவீன் வந்து, வலையில் சிக்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை மீட்டு, ராஜபாளையம் வேட்டைத் தடுப்புப் காவலா் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தாா். பின்னா், அந்தப் பாம்பை வனத் துறையினா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்துக்கு கொண்டு சென்று விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com