அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவா் கைது

 சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

 சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வி. துரைச்சாமிபுரம் பகுதியில் அனுமதியின்றி தோட்டத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெற்றிமுருகன் உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சோதனை நடத்தினா். இதில் காட்டுப்பகுதியில் விஜயகரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கம் (60) என்பவா் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை கைது செய்த வெம்பக்கோட்டை போலீஸாா் அவரிடமிருந்து பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com