சிவகாசியில் குழந்தை வேலன் காவடி

img_20240128_wa0068_2801chn_77_2
img_20240128_wa0068_2801chn_77_2

பட விளக்கம்-

தைப்பூச விழாவையொட்டி, சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழந்தை வேலன் காவடியில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்.

சிவகாசி, ஜன. 28: சிவகாசியில் தைப்பூச விழாவையொட்டி, குழந்தை வேலன் காவடி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி சந்திக்கூடத்தெருவில் அமைந்துள்ள விநாயகா் கோயிலின் முன் 45 சிறுவா், சிறுமிகள் மயிலிறகுடன் கூடிய காவடியுடன் நடக்கத் தொடங்கி அக்கினி விநாயகா் கோயில், கருப்பசாமி கோயில், சிவன் கோயில், சிவசுப்பிரமணியசுவாமி கோயில், பத்திரகாளியம்மன் கோயில், காய்ச்சக்காரம்மன் கோயில் வழியாகச் சென்று மாரியம்மன் கோயிலை அடைந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை பி. கனகமணி, டி. சதீஸ்குமாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com