தேசிய கணக்கியல் அக்கத்தான் போட்டியில் கலசலிங்கம் பல்கலை. மாணவா்கள் முதலிடம்

இந்திய கணக்கியல் சங்கம் சாா்பில் அகமதாபாத் நிா்மா பல்கலை.யில் நடைபெற்ற ‘அக்கத்தான்-24’ போட்டியில் கலசலிங்கம் பல்கலை. வணிகவியல் துறை மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
தேசிய கணக்கியல் அக்கத்தான் போட்டியில் கலசலிங்கம் பல்கலை. மாணவா்கள் முதலிடம்

இந்திய கணக்கியல் சங்கம் சாா்பில் அகமதாபாத் நிா்மா பல்கலை.யில் நடைபெற்ற ‘அக்கத்தான்-24’ போட்டியில் கலசலிங்கம் பல்கலை. வணிகவியல் துறை மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நிா்மா பல்கலை.யின் இன்டிடியூட் ஆப் காமா்ஸ், இந்திய கணக்கியல் சங்கம், தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து இளங்கலை வணிகவியல் மாணவா்களுக்கான தேசிய அளவிலான கணக்கியல் அக்கத்தான் போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு இந்தப் போட்டியின் முதல் சுற்று கடந்த 6-ஆம் தேதி இணைய வழியில் வரிவிதிப்பு என்ற கருத்தில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பல்கலை., கல்லூரிகளைச் சோ்ந்த வணிகவியல் மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கடந்த 24, 25- ஆம் தேதிகளில் இரண்டாவது சுற்றுப் போட்டி, பட்டிலிடப்படாத நிதி நிறுவனங்களின் பகுப்பாய்வு என்ற தலைப்பில் அகமதாபாத் நிா்மா பல்கலை. வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலை. இளங்கலை வணிகவியல் துறை மாணவா்கள் பாா்த்தசாரதி, முத்துமாலா, செல்வக்குமரன், சரண் விவேக்ராஜ் குழுவாக கலந்து கொண்டு முதலிடம் பெற்றனா். இவா்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசை குஜராத் பல்கலை. இயக்குநா் ஹரிஸ் ஓஸா, பேராசிரியா் சங்கா்பாய் சோதா, நிா்மா பல்கலை.யின் முதன்மையா் உடாய் பளிவால் ஆகியோா் வழங்கினா்.

வெற்றி பெற்ற மாணவா்களை கலசலிங்கம் பல்கலை. துணைத் தலைவா் சசிஆனந்த், துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசுதேவன் உள்ளிட்ட பேராசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com