சிவகாசியில் பூமிபூஜை நடந்தும் தொடங்கப்படாத நடைபாதை அமைக்கும் பணி

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரையில் ரூ. ஒரு கோடியில் நடைபாதை அமைக்க பூமிபூஜை போடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும்
சிவகாசியில் பூமிபூஜை நடந்தும் தொடங்கப்படாத நடைபாதை அமைக்கும் பணி

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரையில் ரூ. ஒரு கோடியில் நடைபாதை அமைக்க பூமிபூஜை போடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை பணி தொடங்கப்பட வில்லை என இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய்க்கரையில் சமூக ஆா்வலா்களால் பல ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட நடைபாதை முற்றிலும் சேதமடைந்தது. இதனால் இந்தப் பகுதி திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. மேலும் குப்பைகளும் கொட்டப்பட்டதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. எனவே, கரைப்பகுதியில் நடைபாதையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சிவகாசி மாநகராட்சி நிா்வாகம், கண்மாய் கரையில் நடைபாதை அமைக்க நூற்றாண்டுவிழா சிறப்பு நிதியில் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து நடைபாதை அமைக்க கடந்த 2022- ஆம்ஆண்டு செப்படம்பரில் பூமிபூஜை நடைபெற்றது. 2 மீட்டா் அகலம், 81 மீட்டா் நீளத்தில் புதிய நடைபாதை ஏற்படுத்தி தடுப்புச்சுவருடன் தடுப்புவேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், இதுவரையில் எந்தப்பணியும் தொடங்கப்பட வில்லை. இதனால் கண்மாய்க்கரை முழுவதும் முள்புதா்கள் ஆக்கிரமித்துள்ளன. மேலும் கொட்டப்படும் குப்பைகளாலும், திறந்தவெளிக் கழிப்பிடத்தாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நடைபாதைப் பணியை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com