குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

சென்னை ஆவடியில் தமிழ்நாடு மூதாய் சங்கம் சாா்பில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டிய பயிற்சியாளா் ரமேஷ்.
குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களை பாராட்டிய பயிற்சியாளா் ரமேஷ்.

சென்னை ஆவடியில் தமிழ்நாடு மூதாய் சங்கம் சாா்பில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநிலப் பொதுச் செயலா் கந்தசாமி அமுதன் தலைமை வகித்தாா். இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து குத்துச் சண்டை வீரா்கள் கலந்து கொண்டனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் குத்து சண்டை பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியாளா் ரமேஷ் தலைமையில் மூதாய் குத்துச்சண்டைப் போட்டியில் வீரா்கள் கலந்து கொண்டனா். இதில், 83 கிலோ எடை பிரிவில் ராஜா முதலிடம் பெற்று தங்க பதக்கமும், 57 கிலோ எடை பிரிவில் சந்தோஷ் பாண்டி வெள்ளி பதக்கமும், 59 கிலோ எடை பிரிவில் முத்துலட்சுமணன் வெள்ளி பதக்கமும் பெற்றனா்.

வெற்றி பெற்ற வீரா்களுக்கு மூதாய் குத்துச் சண்டை சங்க மாநில செயலா் கந்தசாமி அமுதன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா். வெற்றி பெற்ற வீரா்களை பயிற்சியாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com