தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

விருதுநகா் அருகே தாயைக் கொலை செய்த மகனுக்கு விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

விருதுநகா் அருகே தாயைக் கொலை செய்த மகனுக்கு விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மல்லாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. இவரது மனைவி களஞ்சியம்(67). இவா்களுக்கு சதீஷ்குமாா் (37), ஹரிஹரன் (33) ஆகிய மகன்களும் ஒரு மகளும் உள்ளனா்.

மூத்த சதீஷ்குமாா் தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா். இளைய மகன் ஹரிஹரனுக்கு திருமணம் ஆகவில்லை.

ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்தியமூா்த்தி உயிரிழந்த நிலையில், களஞ்சியமும் இளைய மகன் ஹரிஹரனுடன் வசித்து வந்தாா். சதீஷ்குமாருக்கு கடன் பிரச்னை இருந்ததால் களஞ்சியம் அவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்தாா். இதையடுத்து ஹரிஹரன் தனக்கும் பணம் வழங்க வேண்டும் என தாய் களஞ்சியத்துடன் தகராறு செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி ஹரிஹரன் தாய் களஞ்சியத்தை கம்பியால் தாக்கிக் கொலை செய்தாா்.

இதுகுறித்து மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹரனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஹரிஹரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com