விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரித்த 3 போ் கைது

சிவகாசி அருகே விதி முறைகளை மீறி மரத்தட்டியில் வைத்து பட்டாசுகள் தயாரித்த, ஆலை உரிமையாளா் உள்பட 3 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே விதி முறைகளை மீறி மரத்தட்டியில் வைத்து பட்டாசுகள் தயாரித்த, ஆலை உரிமையாளா் உள்பட 3 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பட்டாசு ஆலை வளாகத்தில் மரத்தடியில் வைத்து சிலா் பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து இந்த ஆலை உரிமையாளா் சிவகாசி புதுத்தெரு வைரவன் (53), மேலாளா் திலிப்குமாா் (39), ஆலை எழுத்தா் மீனம்பட்டி அய்யப்பராஜ் (33) ஆகியோா் மீது சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.

மேலும், அவரிகளிடமிருந்து பூச்சட்டி பட்டாசு , பிஜிலி பட்டாசு என மொத்தம் 6 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com