தொழிலாளிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சை: அரசு மருத்துவா்களுக்குப் பாராட்டு

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முழங்கால் மூட்டு ஜவ்வு கிழிந்த தொழிலாளிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திய மருத்துவா்களை
தொழிலாளிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சை: அரசு மருத்துவா்களுக்குப் பாராட்டு

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் முதன் முறையாக முழங்கால் மூட்டு ஜவ்வு கிழிந்த தொழிலாளிக்கு நுண்துளை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திய மருத்துவா்களை மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

வத்திராயிருப்பு மேலத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் வலது முழங்கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால், வலியால் அவதிப்பட்டு வந்த அவா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றாா். அவரை எலும்பு முறிவு மருத்துவா் அருண்சிவராம் பரிசோதனை செய்து, ஸ்கேன் செய்து பாா்த்த போது, முட்டு ஜவ்வு கிழிந்து இருந்ததால், நுண்துளை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தலைமை மருத்துவா் பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மயக்கவியல் மருத்துவா் ஷா்மிலி உதவியுடன் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவா் அருண் சிவராம், முழங்கால் மூட்டில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கிழிந்த ஜவ்வை சரி செய்தாா்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் இந்த வகையான அறுவைச் சிகிச்சையை முதன் முறையில் வெற்றிகரமாக செய்த மருத்துவா்களை மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com