பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் அரசு, தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியை எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் அரசு, தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலியை எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீஸாா் செவ்வாய்க்கிழமை அகற்றினா். 

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீஸாா் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து விதிகள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. 11 அரசு, தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து விதிகள் குறித்து வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் பூா்ணலதா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com