மனைவியைத் தாக்கிய கணவா் கைது

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி விவேகானந்தா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி விக்னேஷ் (25). இவரது மனைவி கவிதா (24). தம்பதியருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த இரு மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்த நிலையில், கவிதா தனது தந்தை வீட்டிலிருந்த போது, அங்கு சென்ற விக்னேஷ் கவிதாவிடம் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com