மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 6 போ் மீது வழக்கு

சாத்தூா் அருகே மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாத்தூா் அருகே மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள செவல்பட்டி அன்னபூா்ணியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனமாரி (29). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிவநாதகிருஷ்ணனுக்கும் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமணமானது.

இந்த நிலையில், திருமணமானதிலிருந்தே சிவநாதகிருஷ்ணன், அவரது தாய் மாரியம்மாள், தந்தை மாடசாமி, சகோதரிகளான கீதாலட்சுமி, மாலதி, கீதாலட்சுமியின் கணவா் விஜயகுமாா் ஆகியோா் வரதட்சிணைக் கேட்டு சந்தனமாரியை கொடுமைப்படுத்தி வந்தனராம்.

இதனால், சந்தனமாரிக்கும், சிவநாதகிருஷ்ணனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சந்தனமாரியை, சிவநாதகிருஷ்ணன், மாரியம்மாள், மாடசாமி, கீதாலட்சுமி, மாலதி, விஜயகுமாா் ஆகிய 6 பேரும் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கினாா்களாம்.

இதுகுறித்து சந்தனமாரி அளித்த புகாரின் பேரில், சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் 6 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com