சிவகாசி மாநகராட்சியில் பிப்.10-க்குள் செலுத்தாவிடில் வட்டியுடன் வரி வசூலிக்க உத்தரவு

சிவகாசி மாநகராட்சியில் வருகிற 10-ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவிட்டால், 5 சதவீதம் வட்டியுடன் வரி வசூல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் ஜனவரி மாத இறுதிக்குள் 100 சதவீதம் வரி வசூல் இலக்கை எட்ட வேண்டும் என மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

ஜனவரி 31 ஆம் தேதிக்குள் வரி வசூல் 100 சதவீதம் எட்ட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. எனவே பொறியியல் துறை, சுகாதாரத் துறை, நகரமைப்புத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், அலுவலா்களைக் கொண்டு வரி வசூல் செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மூழுவீச்சில் செயல்பட்டும், தற்போது 52 சதவீதம் வரி மட்டுமே வசூலாகியுள்ளது.

எனவே, மாநகராட்சி 6, 7, 12, 17 ஆகிய வாா்டுகளில் நானே நேரில் சென்று வரி வசூலில் ஈடுபட்டேன்.

இந்த நிலையில், வருகிற 10-ஆம் தேதிக்குள் வரி செலுத்தாதவா்களிடமிருந்து 5 சதவீதம் வட்டியுடன் வசூல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை இணையதளம் மூலமாகவே, வரி வசூல் மையம் மூலமாகவோ உடனடியாக செலுத்தி வட்டியைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com