பைக்கிலிருந்து கீழே விழுந்த உணவகத் தொழிலாளி பலி

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து சறுக்கி கீழே விழுந்த உணவகத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து சறுக்கி கீழே விழுந்த உணவகத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த சங்கம்பட்டியைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் இளையராஜா (32). இவா் ராஜபாளையத்தில் தனியாா் உணவகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி கங்காபரமேஸ்வரி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், இளையராஜா வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் கிடந்த ஜல்லிக் கற்கள் சறுக்கி விட்டதில், இளையராஜா கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com