போக்குவரத்து தொழில் சங்கக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில் சங்க கூட்டமைப்பு, ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் விருதுநகரில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில் சங்க கூட்டமைப்பு, ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் விருதுநகரில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ பொதுச் செயலா் எம். வெள்ளத்துரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளா்களை பழி வாங்கக் கூடாது என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளா் ஓய்வு பெற்றோா் நல அமைப்புச் செயலா் போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com