வடமாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

வடமாநிலத் தொழிலாளி கொலை: மேலும் ஒருவரை போலீசார் கைது

சிவகாசி அருகே நடைபெற்ற வடமாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரத்தில் காா்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான சிமென்ட் செங்கல் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பலா் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சில தொழிலாளா்கள் ஆலைக்கு வெளியே அமா்ந்து மது அருந்திய போது, ஏற்பட்ட தகராறில் பிகாா் மாநிலம், கயா பகுதியைச் சோ்ந்த காங்ரேஷ் புய்யான் (48) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, நாரணாபுரம்புதூரைச் சோ்ந்த வனப்பாண்டியைக் கைது செய்தனா். இந்த நிலையில், அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நாரணாபுரம்புதூரைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளியும், பொன்ராஜ் மகனுமான தமிழ்மணியை (21) போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com